மூவரும் ஒன்றாகவே பேசிக்கொண்டு பார்க்கிங்கில் நடந்தோம்.. நான் காரில் ஏறி ஸ்டார்ட் செய்ததும் அவள் வந்து காரில் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டாள்.. அண்ணா பைக்கினை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.. நான் காரை ஓட்ட ஆரம்பித்ததும் அவள் என்னுடன் பேச ஆரம்பித்தாள்..
“உங்க அண்ணி எப்படி…? நல்லவங்களா…?”
“ஹ்ம்ம்.. ரொம்ப நல்லவங்க.. என்கூட ரொம்ப பாசமா பிரண்ட்லியா இருப்பாங்க.. ”
“ஹ்ம்ம்.. உங்க அண்ணனுக்கும் அவங்களுக்கும் ரிலேஷன்ஷிப் எப்புடி இருக்கு…?”
“தெரியல.. எனக்கே உங்க ரெண்டு பேரு விஷயமும் நேத்து நைட் தான் தெரியும்.. அண்ணா அண்ணி கூட எப்புடி இருக்கான்னு எனக்கு தெரியல.. ஆனா.. அவன் ரொம்ப குழப்பமா நிம்மதி இல்லாம இருக்கான்.. அப்புடி இருக்குற ஒருத்தன் பொண்டாட்டி கிட்ட பாசமா இருப்பானாங்குறது சந்தேகம் தான்..”
“ஹ்ம்ம்.. என்ன பண்றது.. எல்லாமே விதி..”
“ஆனா, கல்யாணம் ஆனதுக்கு அப்புறமா பழைய காதல தேடி போகக்கூடாது.. தேடிப் போனா ரெண்டு பேருக்குமே கஷ்டம் தான்.. இப்ப பாருங்க.. உங்க லைப், அண்ணன் லைப் எல்லாமே எங்க வந்து நிக்குதுன்னு…”
“என்ன பண்றது சிவா..? எல்லாமே மனசு சம்பந்தப்பட்ட விஷயம்.. காதல் ஒரு மனுஷனா எப்புடியெல்லாம் மாத்தும் தெரியுமா..? உங்க அண்ணி என்ன விட அழகா இருப்பாங்கல்ல.. ஆனா, அப்புடி ஒரு வைஃப் கெடச்சும் உங்க அண்ணா என்ன தேடி வந்தாரு.. அதே மாதிரி தான் நானும்.. அதுக்கு காரணம் என்ன…? லவ்…”
“சரி.. அதெல்லாம் ஓகே தான்.. உங்க சைட்ல இருந்து பாத்தா தான் உங்க பக்கம் உள்ள நியாயம் எல்லாம் புரியும்.. ஆனா இந்த சொசைட்டிக்கு அதெல்லாம் புரியாது.. உங்க அம்மா அப்பா.. எங்க அம்மா அப்பா.. யாரா இருந்தாலும் அவங்களுக்கும் புரியாது.. ஆனா இப்ப இந்த பிரச்சனைக்கு நாம என்ன பண்ண போறோம்..? வாட் நெக்ஸ்ட்…?”
“தெரியல சிவா.. ஆனா, என்னோட லைஃப் ஆன மாதிரி உங்க அண்ணி லைஃபும் ஆகுறதுக்கு நா ஒரு நாளும் விரும்ப மாட்டேன்.. எல்லாம் ஒரு நாள் சரியாகும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு..”
“எல்லாம் சரியாகும்ன்னா..? எப்புடி…? மறுபடியும் உங்க ஹஸ்பண்ட் உங்கள சேத்துப்பாரா…?”
“தெரியல.. அவரு ரொம்ப நல்லவரு.. கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட 7 8 மாசம் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டாரு.. ஆனா.. எதனால அப்புடி பண்ணாருன்னு எனக்கு இன்னுமே புரியல.. ஆனா, மறுபடியும் அவர் லைஃப் ல போக எனக்கு விருப்பம் இல்ல.. அவரு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்கட்டும்..”
“அப்போ நீங்க என்ன பண்ண போறீங்க…?”
“காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்.. பாக்கலாம்..”
“ஆனா எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு..”
“என்ன..?”
“கேட்டா தப்பா நினைக்கக் கூடாது..”
“நீங்க என்ன கேக்க போறீங்கன்னு எனக்கு தெரியும்.. பரவால்ல கேளுங்க..”
“கல்யாணம் ஆகி 7 மாசமா உங்க ரெண்டு பேருக்குள்ளயும் எதுவுமே நடக்கலன்னு சொல்றது.. சான்ஸே இல்ல…”
“அப்புடி நடந்திருந்தா எதுக்கு டைவர்ஸ் வரைக்கும் வர போகுது…?”
“ஓஹ்ஹ்.. நடந்திருந்தா டைவர்ஸ் வரைக்கும் வந்து இருக்காது.. நீங்களும் மனசு மாறி இருப்பீங்க..”
“இங்க பாருங்க சிவா.. நா என்னோட மனச மாத்திக்க தான் அவ்ளோ நாளும் ட்ரை பண்ணேன்.. அப்புறம் உங்க அண்ணா கூட பேச ஆரம்பிச்சதும் என்னால அவன மறக்க முடியாம போயிடிச்சு.. அப்புடி அப்புடின்னு டைம் ரொம்ப வேகமா போயிடிச்சு..”
“ஹ்ம்ம்.. உங்க விஷயம் எங்க அண்ணிக்கு தெரியுமா…?” நான் தெரியாதது போல கேட்டேன்..
“தெரியும்.. உங்க அண்ணா அவங்ககிட்ட எல்லாமே சொல்லிட்டாரு..”
“ஒஹ்.. அப்போ தெரிஞ்சும் எதுவும் சொல்லாம இருக்காங்களா….?”
“ஹ்ம்ம்.. என்னோட லைஃப்க்கு ஒரு நல்ல முடிவு வரும் வரைக்கும் அவங்க உங்க அண்ணாவ விட்டு விலகி இருக்காங்க..”
“ஓஹ்..”
“அதனால தான் சொல்றேன்.. எனக்கு அவங்க லைஃப் ல விளையாட மனசு வரல.. நா இப்புடியே ஏதாச்சும் பண்ணிக்குவேன்.. உங்க அண்ணனும் அண்ணியும் சந்தோசமா வாழ்ந்தா எனக்கு போதும்.. காலம் போக போக எல்லாமே மாறிடும்.. மறந்து போய்டும்.. எல்லாத்துக்கும் ஒரு முடிவும் வரும்..”
“உங்க அம்மா அப்பா உங்கள மறுபடியும் ஏத்துக் கொள்ள மாட்டாங்களா…?”
“அவங்க என் மேல ரொம்ப கோவமா இருக்காங்க.. என்ன மன்னிப்பாங்களான்னு எனக்கு தெரியல.. மன்னிச்சா தான் ஏத்துக்குவாங்க..”
“சோ.. அவங்க உங்கள ஏத்துக்கொள்ளலன்னா உங்க லைஃப் ல இனிமே எதுவும் நடக்க போறதில்ல.. இப்புடி தனியாவே தான் இருக்கனும்.. இல்ல….?”
“தனியா இருக்குறதுல எனக்கு எந்த ப்ரோப்ளமும் இல்ல.. இவ்ளோ சின்ன வயசுலயே எல்லா கஷ்டங்களையும் அனுபவிச்சுட்டேன்.. அழுது அழுது பழகிடுச்சு.. இப்போ நா ரொம்ப ஸ்ட்ரோங்கான ஒரு பொண்ணு.. என்னால தனியாவும் வாழ முடியும்..”
“அப்புடியெல்லாம் உங்கள விட முடியாது.. இதுல எங்க அண்ணாவும் சம்பந்தப்பட்டு இருக்குறதனால உங்க எதிர் காலத்துக்கு எங்க குடும்பமும் பொறுப்பு..”
“சோ…?”
“ஒன்னு.. எல்லாரும் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வரணும்..”
“நல்ல முடிவுன்னா…? என்ன முடிவு..?”
“ஒன்னு.. உங்க ஹஸ்பண்ட் கூட உங்கள சேத்து வைக்கணும்..”
“வேற…?”
“இல்லன்னா வேற ஒரு பையன பாத்து உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்…”
“என்னோட லைஃப் ல நடந்த பிரச்சனைகளயெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு யாரு என்ன கல்யாணம் பண்ணிப்பாங்க..? சொல்லுங்க…?”
“யாராச்சும் ஒரு நல்லவன் கிடைக்காமலா போயிருவான்…?”
“அந்த அளவுக்கு நல்லவன் யாருப்பா இருப்பாங்க…? நீங்க இப்புடி ஒரு நிலமைல உள்ள பொண்ண கல்யாணம் பண்ணிப்பிங்களா…?”
அவள் அப்படிக் கேட்டதும் எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. ஒரு பேச்சுக்கு நல்லவன் என்று பெயர் எடுக்க ‘ஆமாம்’ என்றால் கூட அண்ணனது காதலி மீது ஆசைப்படுகிறேன் என்று என்னை ஒரு வேளை அவள் கேவலமாக நினைக்கக் கூடும்..
“ஹாஹா.. அண்ணா காதலிச்ச பொண்ண நா எப்புடி கல்யாணம் பண்ண முடியும்.. கல்யாணம் பண்ணாலும், ஒரே குடும்பமா எப்புடி வாழ முடியும்…? அது மட்டுமில்லாம எங்க பேமிலி அத ஏத்துப்பாங்களா…? அண்ணி ஏத்துப்பாங்களா…? அவங்க பேமிலிக்கு தெரிஞ்சா என்ன ஆகும்…?”
“ஹ்ம்ம்.. அதுவும் சரி தான்..”
“ஹ்ம்ம்.. யாராச்சும் ஒரு நல்லவன தேடிக் கண்டுபிடிச்சு உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்.. சரியா…?”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. இப்ப இருக்குற பிரச்சனைக்கு கல்யாணம் ஒன்னு தான் தேவ எனக்கு.. ஹாஹா..”
“நீங்க கல்யாணம் பண்ணா தானே அண்ணாவோட லைஃப் சரியாகும்..”
“ஹ்ம்ம்.. பாக்கலாம்..”
“இல்லன்னா.. இன்னொரு ஐடியா இருக்கு..”
“என்னது…?”
“பேசாம நீங்களும் அண்ணாவும் எங்கயாச்சும் கண் காணாத ஒரு இடத்துக்கு போய் கல்யாணம் பண்ணிக்கோங்க…?”
“அப்போ உங்க அண்ணி லைஃப் என்ன ஆகும்…?”
“அண்ணா பண்ண தப்புக்காக.. அவங்க பேமிலிகிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணி நா அவங்களுக்கு வாழ்க்க குடுக்குறேன்..”
“ஓஹ்.. தியாக உள்ளம்..” என்றாள் நக்கலாக..
“வேற என்ன தான் பண்ண…?”
“ஹாஹா.. உங்க அம்மா அப்பா அண்ணி வாயால திட்டும் சாபமும் வாங்கிக்கிட்டு என்னால சந்தோசமா வாழ முடியுமா என்ன…? அதுல புதுசா உங்க லைஃப வேற நா நாசமாக்கனுமா…?”
“எந்த பக்கம் பாத்தாலும் சிக்கல்த் தான்.. என்ன தான் பண்ண…? உங்க ப்ரோப்லம்ஸ்ட டிசைன் அப்புடி.. ஹாஹா..”
“சரி சிவா.. கார நிப்பாட்டுங்க.. நா இங்க இருந்து ஆட்டோலயோ நடந்தோ போய்க்கிறேன்..”
“எதுக்கு…? நானே ட்ரோப் பண்றேன்.. இன்னும் கொஞ்ச தூரம் தானே..”
“இல்ல சிவா.. நா ஒரு பையன் கூட வந்து இறங்குறத இப்ப நா வாடகைக்கு இருக்குற வீட்ல பாத்தா தப்பா நினைப்பாங்க.. அதனால தான் சொல்றேன்..”
“ஹ்ம்ம்.. சரி ஓகே.. எதுக்கும் பயப்புடாதீங்க.. எல்லாம் ஓகே ஆகும்.. யோசிச்சு நல்ல ஒரு முடிவு எடுப்போம்.. என்னோட நம்பர சேவ் பண்ணிக்கோங்க.. ஏதும்ன்னா கட்டாயம் கால் பண்ணுங்க..”
“ஹ்ம்ம்.. ஓகே சிவா.. தேங்க்ஸ் அலோட்..” என்றவாரு எனது நம்பரை அவளது போனில் சேவ் செய்து கொண்டு விடை பெற்றாள்..
ஆண் என்ற ரீதியில் அவள் அழகில் சற்று நான் மயங்கி இருந்தாலும்.. அவளுடன் சிறு பயணம் செல்ல எனது மனது குதூகளித்திருந்தாலும்.. ஒரு வேளை அவள் யார் கையும் படாத கன்னிப் பெண்ணாக இருந்தாலும்..
எனது மனதில் அவள் மீது எந்த ஒரு தப்பான எண்ணங்களும் ஏற்படவில்லை.. அவளே நொந்து போய் இருக்கின்றாள்.. இந்த சிறு வயதில் அனுபவிக்க முடியாத கஷ்டங்களை எல்லாம் அனுபவித்திருக்கின்றாள்.. அவளைப் பார்த்தாலே பாவமாக இருந்தது.. இன்னொன்று.. காதலனை மறக்க முடியாமல் கட்டிய புருஷனையே தன்னைத் தொட அனுமதிக்காதவள் அவள்.. நான் ஆசைப்பட்டால் மட்டும் அது நடந்துடுமா என்ன…?
அவள் அழகானவள் தான்.. ஆனால், தீண்டத்தகாதவள்..
அண்ணனிடம் காரை கொடுத்து விட்டு பைக்கினை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.. மணி 6.30 ஆகி இருந்தது.. அண்ணி அம்மாவுடன் ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக்கொண்டிருந்தாள்.. நான் ரூமுக்குள் சென்று சற்று நேரத்தில் அவள் எனக்காக டீ எடுத்துக் கொண்டு வந்தாள்..
“என்னாச்சி சார்..? போன காரியம் என்னாச்சி…?”
“எதுவும் ஆகல.. அவங்க ஸ்டோரிய சொன்னாங்க.. கேட்டுட்டு வந்தேன்.. அவ்ளோ தான்..”
“ஏதோ முடிவு எடுக்கணும் அது இதுன்னு சொன்னியே..”
“அதெல்லாம் இல்ல.. அவங்க ஸ்டோரிய கேட்டா என்ன பண்றதுன்னே புரிய மாட்டேங்குது..”
என்றவாறு அங்கு நடந்த முழு விபரத்தினையும் அவளிடம் கூறினேன்.. அழகாக கேட்டுக் கொண்டிருந்தாள்..
நான் அவளை இழுத்து இறுக்கக் கட்டி அணைத்தேன்.. ஆனால் எனது கையினை பிடித்து விலக்கி அவள் சட்டென விலகினாள்..
“என்னடா பண்ற..? அம்மா வந்துட போறாங்க.. இடியட்..”
“ஹாஹா.. வந்தா பரவால்ல..”
“போடாங்ங்ங்கோ…”
“ஹாஹா.. நா என்ன பண்ண….? நீ அவ்ளோ அழகா இருக்க.. பாத்தாலே இறுக்க கட்டி பிடிக்கணும்ன்னு தோணுது..”
“அப்போ லீனாவ பாக்கும் போது என்ன தோணிச்சு சாருக்கு….?”
“அவள எப்புடிடா அண்ணன் கூட சேத்து வைக்கிறதுன்னு தோணிச்சு..”
“அவ அழகா இருந்தாளா…?”
“ஹ்ம்ம்.. அழகு தான்.. ஆனா என்னோட அபர்ணா குட்டி அளவுக்கு இல்ல..”
“சும்மா பொய் சொல்லாத.. உண்மைய சொல்லு..”
“உண்மைய தான் சொல்றேன்.. மனசு பூரா நீ இருக்கும் போது அடுத்த பொண்ணுங்க அழகா தெரிவாங்களா என்ன….?”
“அப்ப அழகுன்னு சொன்னியே..”
“அழகு தான்.. பட், உன்ன விட அழகில்லன்னு தானே சொன்னேன்..”
நாணத்தில் அவள் சற்று புன்னகை பூக்க அவள் முகம் கொஞ்சம் சிவந்தது.. சட்டென இழுத்து அவள் கன்னத்தில் ஒரு ‘ப்ப்ப்ச்’ வைத்தேன்..
“டேய்ய்.. பொறுக்கி.. நா போறேன்.. விட்டா அம்மாகிட்ட நீயே மாட்டி விட்டுறுவ..” ஒரு கையால் கன்னத்தினை துடைத்தவாறு மறு கையால் எனது நெஞ்சில் ஒரு குத்து விட்டு விட்டு அவள் ரூமை விட்டு வெளியேறினாள்..
(தொடரும்..)
57138cookie-checkஅபர்ணா அண்ணி – 29