வண்டி கிளம்பும் நேரத்தில் தான் என்னால் வர முடிந்தது, என் கூட பயணி ஒரு அழகு மங்கை. அழகென்றால் அப்படி ஒரு அழகு.மஞ்சள் நிறம், முகத்தில் லேசாக மஞ்சள் பூசி இருந்தாள். படித்த பெண்ணாக இருக்கிறாளே, மஞ்சள் பூசி இருக்கிறாளே என்று ஆச்சிர்யப்பட்டேன்.என் பெயர் Kannan என்று அறிமுகப்டுத்திக்கொண்டேன்.என்னைப் பார்த்து புன்னைகைத்தாள். நான் “மேகலா” என்றாள்.நல்ல பெயர் என்றேன்.ஒரு இண்டர்வியுக்காக மும்பை செல்கிறேன். பேச்சைத் தொடங்கினேன்.”என்ன படித்திருக்கிறீர்கள் ” மேகலா கேட்டாள்இஞ்ஜினியரிங்க் முடித்து, ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.